13 மார்ச், 2010

சரத்பொன்சேகா மருமகன் இந்திய கப்பலில் தப்ப முயற்சி?




இலங்கையில் ராணுவப் புரட்சி செய்யத் திட்டமிட்டதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது மருமகன் தனுன திலகரத்னே மீது ஆயுத தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் தலைமறைவாக உள்ளார்.

இலங்கை போலீசாரிடம் பிடிபட்டால் கடும் தண்ட னையை அனுபவிக்க வேண் டியதிருக்கும் என்பதால் தனுன திலகரத்னே சரண் அடைய மறுக்கிறார். அவர் கப்பல் மூலம் இந்தியா தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

இதனால் சிங்கள கடற்படை கண்காணிப்பை தீவி ரப்படுத்தியது. இந்த நிலை யில் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இந்திய கப்பல் ஒன்றை சிங்கள கடற்படை மடக்கி பிடித்து சென்றது. அந்த கப்பலில் தான் தனுன தில கரத்னே தப்ப திட்டமிட்டிருந்தார் என்று இலங்கை சந்தேகிக்கிறது.

அந்த கப்பலில் இருந்த 15 இந்தியர்களையும் சிங்கள அரசு சிறையில் அடைத் துள்ளது. அவர்களையும், கப்பலையும் விடுவிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டு கோளை இலங்கை ஏற்கவில்லை.

இதனால் சிங்களர்களின் நடவடிக்கைகளில் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை படகு, கப்பல்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக