13 மார்ச், 2010

வழக்கு விசாரணையில் அஜரவரா பொன்சேகா?





கொழும்பு:"இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக, ராணுவ கோர்ட்டில் ஆஜராக மாட்டார்'என, தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா மீது, ராஜபக்ஷே அரசை கவிழ்க்க சதி செய்தது உட்பட பல வழக்குகள், ராணுவ கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் பொதுச் செயலர் விஜிதா ஹெராத் கூறியதாவது:பொன்சேகா மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக, ராணுவ அதிகாரிகள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பொன்சேகா ராணுவ தளபதியாக இருந்தபோது, அவரது கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டவர்கள். எனவே, வழக்கு விசாரணையின்போது, ராணுவ கோர்ட்டில் ஆஜராவதில் பொன்சேகா ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும், இந்த விஷயத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு, அதன்படி செயல்படுவோம்.இவ்வாறு விஜிதா ஹெராத் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக