13 மார்ச், 2010

தெற்காசியாவில் மிகச் சிறந்தாகத் தெரிவு







கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் தெற்காசியாவில் மிகச் சிறந்த விமான நிலையங்களுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக விமன நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் கமல் ரத்வத்த நேற்றுக் கூறினார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விமான சேவைகள் தொடர்பான அதிகாரிகளின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தெற்காசியாவிலேயே மிகச் சிறந்ததாக கருதப்படும் மூன்று விமான நிலையங்களுள் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமும் தெரிவாகியுள்ளது. துபாயில் அண்மையில் நடைபெறவிருக்கும் விருது வழங்கும் நிகழ்வுக்கு எமக்கும் அழைப்பிதழ் கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமைய ரிளரான ஸ்ரீ மந்தக்க சேனாநாயக்க கூறுகையில்;

மத்தளவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் விமான நிலையம் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு ஒப்பானதாக அமையும். அதேவேளை சீனாவின் பீஜிங் மற்றும் செங்ஹை ஆகிய இடங்களுக்கும் இந்தோனேசியாவின் ஜகர்த்தாவுக்கும் ஸ்ரீ லங்கனின் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கூறினார்.

இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஜி. எஸ். வித்தானகே கூறுகையில், எமிரேட்ஸ் வசமிருக்கும் ஸ்ரீ லங்கனுக்கு சொந்தமான 43 பங்குகளையும் மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதேவேளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் தற்போது 12 எயார்பஸ்களேயுள்ளன. இதன் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

பாரிய எயார்பஸ்களான ஏ340, ஏ320 ஆகிய பஸ்களை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸரூக்காக பெற்றுக்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.

வாரத்துக்கு மூன்று தடவைகள் டோக்கியோ சென்று வரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவையினை வாரத்துக்கு 07 தடவைகளாக கூட்டுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2016ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு விமான சேவைகள் மூலம் கிடைக்கும் 2.6 மில்லியன் வருமானத்தில் ஆகக் குறைந்தது 55 சதவீதத்தை ஸ்ரீலங்கன் எயார்லை ன்ஸினூடாக பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு எனவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக