சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் அவருக்கே உரியது. எனவே அவருடைய ஆசனத்தைப் பாதுகாப்பதற்கு ஜே.வி.பி. முழு முயற்சி மேற்கொள்ளும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதனால் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டதென்பதனை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாப்பதற்கும், உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இரு வேறு மனுக்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக