10 அக்டோபர், 2010

கனடா விமானப்படையின் மாஜி கமாண்டர் சிக்கினார்

பெல்லிவில்லி: கனடா விமானப்படையின் மாஜி கமாண்டர் மீது 2 கொலை மற்றும் ஏராளமான பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டு தண்டனை அனுபவிக்க தயாராகி விட்டார் கர்னல் ரூசல் வில்லியம்ஸ். இங்கிலாந்தில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர் ரூசல் வில்லியம்ஸ்(47). கனடா விமானப்படையில் பைலட்டாக சேர்ந்த இவர் பதவி உயர்வு பெற்று, விமானப்படை தளத்தின் கமாண்டராக உயர்ந்தார். மிகவும் திறமையுடன் விளங்கியதால் கனடா பிரதமருக்கு பைலட்டாக பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 2005ம் ஆண்டில் கனடா சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அவருக்கும் பைலட்டாக இருந்துள்ளார் ரூசல் வில்லியம்ஸ். இத்தகையை பெருமை வாய்ந்த உயர் அதிகாரிக்கு வக்கிர புத்தியும் இருந்துள்ளது. இவர் மீது ஏராளமான பாலியல் புகார்கள் கூறப்பட்டன. பெண்கள் அறையில் புகுந்து, அவர்களின் உள்ளாடைகளை குறிப்பாக பேண்டீஸ், பிராக்களை திருடியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது 82 புகார்கள் கூறப்பட்டுள்ளன. தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறும் பழக்கமும் வில்லியம்சுக்கு இருந்துள்ளது. மறுப்பு தெரிவிக்கும் பெண்களை அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டுவார். இது ஒரு கட்டத்தில் எல்லை மீறி கொலையில் முடிந்துள்ளது. தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரி மேரி காமியோ(38) என்பவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துவந்தார் வில்லியம்ஸ். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேரியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வில்லியம்ஸ், தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேரி மறுத்ததால் அவரை கொலை செய்துவிட்டு தப்பினார். அதன்பின் கடந்த பிப்ரவரியில் ஜெசிகா லூலாய்ட்(27) என்ற இளம் பெண்ணை கொலை செய்துள்ளார். இந்த கொலைகள் தொடர்பாக நடந்த புலன் விசாரணையில் சிக்கினார் கமாண்டர். பதவி பறிபோன கமாண்டர் இப்போது கோர்ட் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்ள தயாராக இருப்பதாக தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார் ரூசல் வில்லியம்ஸ். விமானப்படையில் உயர் அதிகாரியாக பணியாற்றிய வில்லியம்ஸ் பயங்கர குற்றவாளியாக இருந்துள்ளது கனடா அரசையும் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக