விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனை வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்கி மறுவாழ்வைத் தொடங்குவதற்கு உதவும் நோக்கில் இந்தக் கடன் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஏதாவது ஒரு தேசிய வங்கியில் 4 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படும். தாங்கள் தொடங்கவிருக்கும் தொழில் குறித்த விவரத்தை அளித்தால் அதை அரசு பரிசீலித்து அதிகபட்சம் ரூ. 2.5 லட்சம் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யும்.
இத்திட்டத்தின் கீழ், முன்னாள் விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது மறுகுடியமர்த்தப்பட்டுள்ள ஈழத்தமிழ் மக்களும் கடன் கோரி விண்ணப்பிக்கலாம் என்று அந்நாட்டின் மறுவாழ்வு ஆணையர் சுதந்த ரணசிங்கே தெரிவித்தார்.
கடன் கோரி வருபவர்களுக்கு உதவும் வகையில் வடக்கு வவுனியாவில் உதவி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக