சர்வதேச உளச்சுகாதார அபிவிருத்தி தினத்தை முன்னிட்டு கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள கண்டி மாவட்ட உளவியல் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இன்று கண்காட்சி ஒன்று இடம் பெறுகின்றது.
உளவிருத்தி மற்றும் உளச் சுகாதாரம் தொடர்பாக பொதுமக்களையும் பாடசாலை மாணவர்களையும் விழிப்படையச் செய்யும் வகையில் இது ஒழங்கு படுத்தப் பட்டுள்ளது.
பொதுவாக உடல் ஊன முற்றவர்களை மட்டுமே நாம் எளிதில் கண்டு கொள்வதுடன் அவர்களது பிரச்சினைகளை மட்டுமே சமுதாயம் அடிக்கடி பேசும்.
ஆனால் எம் சமூகத்தில் உளவியல் ரீதியாக ஊன முற்றவர்களும் எம்மத்தியில் பரவலாக இருக்கிறார்கள் என்பதை சமூகம் கண்டு கொள்வதில்லை. இதுபற்றி பொதுமக்களை விழிப்படையச் செய்வதே இக்கண்காட்சியின் நோக்கமென ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.
பெறுமளவு பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் இதனைப் பார்வையிட்டு வருகின்றனர். இன்னும் மூன்று தினங்களுக்கு இக்கண்காட்சி இடம் பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக