மட்டக்களப்பு வெளிச்ச வீடு அமைந்துள்ளபகுதிக் கடலில் குழிக்கச்சென்ற இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை ஜந்து இளைஞர்கள் இக்கடலில் குழிக்கச் சென்றுள்ளனர். இதில் இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு நாவற்குடா பூநொச்சிமுனை கடற்கரை வீதியைச்சேர்ந்த சிங்கராசா ஜோபின்(19) மற்றும் நாவற்குடா கலாசார மண்டபத்திற்கு பின்பகுஙீதியில் வசித்துவரும் தெய்வேந்திரன் கிருஸ்னராஜ்(19) ஆகிய இரு இளைஞர்களுமே இதில் உயிரிழந்துள்ளனர். இதில் கிருஸ்ணராஜ் என்பவரின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜோபின் என்பரின் சடலம் இதுவரை கண்டெடுக் கப்படவில்லை. பொதுமக்களும் மீனவர்களும் அப்பகுதி கடற்படையினருடன் இணைந்து சடலத்தை தேடி வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு இளைஞர்களில் ஒருவர் மேசன் தொழில் ஈடுபடுவரெனவும் மற்றயவர் பெயிண்டிங் வேலை செய்வரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக