14 மார்ச், 2010

ஓய்வுபெற்ற பின்னரும் நிரந்தர வருமானம் பெற நிதியம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தத் தீர்மானம்


ஓய்வுபெற்ற பின்னரும் நிரந்தர வருமானமொன்றைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் நிதியமொன்றை எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளதாகத் திறை சேரியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர தெரிவித்தார்.

இலங்கையை ஆசியாவின் வியத்தகு நாடாக உருவாக்குவதில் எதிர்கொள்ள நேரும் பல்வித சவால்களையும் மிகுந்த கவனத்துடன் வெற்றிகொள்ள வேண்டியுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.

பு2020ம் வருடத்தில் இலங்கைபூ எனும் தொனிப் பொருளில் உரையாற்றிய அவர், 2020ம் ஆண்டில் நாட்டில் சகலருக் கும் வீடு, அடிப்படை வசதிகளுடன் தனிநபர் வருமானத்தை 7,000 அமெரிக்க டொலராக உயர்த்துவதே அர சாங்கத்தின் நோக்கமாகு மெனவும் தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனையின் எதிர்காலத் திட்டத்தை தொழிலாளர் வர்க் கத்தினருக்கு விளக்கும் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே திறைசேரியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:- மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம் கடந்த தேர்தலோடு ஆரம்பமானது. தற்போது நாட்டில் தனிநபர் வருமானம் 2,000 அமெரிக்க டொலராக உள்ளது. இன்னும் ஐந்து வருடங்களில் 4,000 டொலராகவும், 2020ல் 7,000 அமெரிக்க டொலராகவும் அதிகரிக்கச் செய்வதே எமது இலக்காகும்.

சகலருக்கும் வீடு, அடிப்படை வசதிகள், மின்சாரம், கல்வி, சுகாதாரம், தொடர்பாடல், தொழில்நுட்ப வசதிகளுடன் சகல மாணவர்களுக்கும் கணனி அறிவை வழங்கும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படும்.

அத்துடன் சிசுமரணத் தொகையை பூஜ்ஜியமாக்குவதற்கும் உகந்த வழிவகை மேற்கொள்ளல், ஆசியாவின் வியத்தகு நாடாக இலங்கையை உயர்த்துவதே மஹிந்த சிந்தனையின் நோக்கம். நாட்டின் அரசியல், பொருளாதார நிபுணர்களின் கவனத்தை இத்திட்டம் ஈர்த்துள்ளதுடன் நாட்டின் வளத்தைப் பெருக்குவதே இதன் இலக்காகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக