பசும்பாலைக் கொள்வனவு செய்யும் விலை லீற்றருக்கு ரூபா 12.00 படி வெகு விரைவில் அதிகரிக்கப்படும் என்று கால்நடை வள மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எச். ஆர். மித்ரபால நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு-செலவுத் திட்டத்தில் அறிவித்தபடி பசும்பாலை லீற்றருக்கு ஐம்பது ரூபா (50) படி கொள் வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு ஏற்ப பசும்பாலை லீற்றருக்கு ஐம்பது ரூபாய்ப் படி கொள்வனவு செய்வதற்கான சுற்றறிக்கை அடுத்துவரும் சில தினங்களுக் குள் வெளியிடப்படுவதுடன், அவை பசும்பாலைக் கொள்வனவு செய்யும் நிலையங்க ளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.தே.க. பாராளுமன்ற உறுப் பினர் அனோமா கமகே கேட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதிய மைச்சர் மேற்கண்டவாறு பதிலளித் தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற் றுகையில்;
கிழக்கு மாகாணத்தில் பாற் பண்ணை விவசாயிகள் 49 ஆயிரத்து 415 பேர் உள்ளனர். இவர்களில் 24 ஆயிரத்து 60 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 18 ஆயிரத்து 210 பேர் அம்பாறை மாவட்டத்திலும், 7 ஆயிரத்து 145 பேர் திருமலை மாவட்டத்திலும் வாழுகின்றனர்.
மாதா மாதம் கிழக்கு மாகாண த்தில் மாத்திரம் 30 இலட்சத்து 50 ஆயிரம் லீற்றர் பசும்பால் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இவற்றில் மட்டு மாவட்டத்தில் 18 இலட்சம் லீற்றர்களும், அம் பாறை மாவட்டத்தில் 15 இலட்சம் லீற்றர்களும் கிடைக்கப்பெறுகின் றன.
இந்த வகையில் கிழக்கு மாகா ணத்தில் உற்பத்தி செய்யப்படும் பசும்பாலில் 82 இலட்சத்து 48 ஆயிரத்து 153 லீற்றர்களை அரசா ங்கம் வருடா வருடம் கொள்வனவு செய்து வருகின்றது.
தற்போது ஒரு லீற்றர் பசும்பால் 38.00 ரூபாபடி கொள்வனவு செய்யப்படுகின்றது. இதனை வரவு- செலவுத் திட்டத்தில் அறிவித்தபடி ஐம்பது ரூபாப்படி கொள்வனவு செய்யவிருக்கின்றோம். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக