19 அக்டோபர், 2010

மெக்ஸிகோவில் 105 தொன் கஞ்சா பறிமுதல்!

சுமார் 105 தொன் கஞ்சா போதைப்பொருளை மெக்ஸிகோவின் எல்லை நகரான டிஜுஹானா அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர்.

கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டதைவிட, இது மிக அதிகமான தொகை என மெக்ஸிகோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்துக்குரிய வாகனங்கள் சிலவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். பின்னர் அவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

அதன்போது 10,000 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 105 தொன் நிறைகொண்ட கஞ்சா போதைப்பொருளினை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதுதொடர்பில் 11 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 2 பெரிய துப்பாக்கிகள், டிரக் வண்டிகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட வன்முறைகளால் சுமார் 28,000 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக