19 அக்டோபர், 2010

உலகிலேயே அதிக விலைமிக்க வீடு: முகேஷ் அம்பானியின் வானளாவிய மாளிகை

4500 கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் “மும்பை மாளிகை” உலகிலேயே அதிக விலைமிக்க வீடாகும்.

ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியால் மும்பையில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுதான் உலகிலேயே அதிக விலைமிக்க வீடு என்று அமெரிக்காவின் போர்பஸ் இதழ் தெரிவித்துள்ளது.

தெற்கு மும்பையின் அல்டா மவூண்ட் சாலையில் அமைந்துள்ள “அந்திலா” என்ற இந்த வீடு 4500 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள் ளது.

ஆனால் இந்த வீடு விற்பனைக்கு அல்ல. இதனால் உலகின் அதிக விலைமிக்க வீடுகள் குறித்த எங்களது பத்திரிகையின் பட்டியலில் இதை வெளியிட முடியவில்லை என்று போர்பஸ் தெரிவித்துள்ளது.

27 மாடிகளுடன் 570 அடி உயரத்தில் அந்த வீடு விண்ணை முட்டும் விதத்தில் நிற்கிறது. அந்த சொகுசு பங்களா விரைவில் திறப்பு விழாவை எதிர்நோக்கியுள்ளது. இந்தத் திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட ஏராள மான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க வுள்ளனர்.

வீட்டை வெளியில் பார்க்கும் போது ஆச்சர்யம் என்றால் உள்ளே சென்று பார்த்தால் அதைவிட பன் மடங்கு வியப்பாகவுள்ளது.

வீட்டுக்குள் சுகாதார மையம் உடற்பயிற்சி கூடம் 50 இருக்கை கைகளையுடைய திரையரங்கம், நடன ஸ்டுடியோ, விருந்தினர் அறை, தோட்டம் என அனைத்து வசதிகளும் உள்ளன.

160 வாகனங்களை நிறுத்துவ தற்கும் வீட்டின் கீழ் தளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டின் தளங்களுக்கு எளிதாகச் சென்றுவர 9 லிப்ட்டுகள் நிறுவப் பட்டுள்ளன என்று போர்பஸ் பத்தி ரிகை கூறியுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி மிகப் பெரிய அளவில் கிரக பிரவேசம் நடத்தி அந்த வீட்டில் குடியேற இருக்கிறார் முகேஷ்.

27 தளங்களைக் கொண்ட இந்த பிரமாண்ட மாளிகையின் உச்சியில் மூன்று ஹெலிகொப்டர்கள் இறங்கு வதற்கான தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

உலகின் மிகச் சிறந்த கட்டட க்கலை நிபுணர்களைக் கொண்டு ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது இந்த மாளிகை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக