19 அக்டோபர், 2010

ஜனாதிபதி தலைமையில் வவுனியாவில் இன்று வடக்கு அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

வட மாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று 19 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது.

வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த மீளாய்வுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், வட மாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வட மாகாணத்தில் நடை பெறும் முதலாவது அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இதுவாகும். யுத்தத்திற்குப் பின்னர் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும், முன்னெடுக் கப்பட்டுவரும் பல்வேறு பாரிய அபி விருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெ டுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், வடக்கின் வசந்தத்தின் மூலம் முன் னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளன.

வட மாகாண சபையினால் முன்னெ டுக்கப்பட்ட சகல அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆளுநரின் சார்பில் வட மாகாண பிரதம செயலாளர் ஏ. சிவசுவாமி இந்தக் கூட் டத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.

அதனையடுத்து ஐந்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற் பாடுகள், பாரிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கலஸ் பிள்ளே ஆகியோர் தனித்தனியாக சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதுதவிர, அடுத்த ஐந்தாண்டு காலத் திற்குள் முன்னெடுக்கப்படவுள்ள அபிவி ருத்தித் திட்டங்கள், முன்வைக்கப்பட வுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இதற்குத் தேவையான ஆலோசனைகளை ஜனாதிபதி இந்தக் கூட்டத்தின் போது வழங்கவுள்ள தாகவும் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக