11 மார்ச், 2010

சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் நகரங்கள் நகர்வு



சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் அங்குள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் (பெப்ரவரி) சிலி நாட்டின் மேற்கு கடற்கரையில் 8.8 ரிச்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படு காயம் அடைந்தனர்.

பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பிரேசில், போர்டலேசா போன்ற நாடுகளில் குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில் பூகம்பத்தால் சிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 4 பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள், புவியியல் வல்லுனர்கள் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இதில், சிலி நாட்டில் உள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளது.

வல்பாறைசோ, மென்டோஷா, ஆர்ஜென்டினா போன்ற நகரங்களும் வழக்கத்தை விட நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக