11 மார்ச், 2010

6,17 ஆம் திகதிகளில் இராணுவ நீதிமன்றத்தினால் சரத்பொன்சேகாவிற்கு விசாரணை



இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 16,17 ஆம் திகதிகளில் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரணை செய்யப்படவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இராணுவ தளபதி ஜகத் ஜயசூரியவின் கீழ் இரு நீதிமன்றங்கள் இதற்கென ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இதனை தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர், புஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினர் இரண்டு நீதிமன்றங்களையும் இயக்குவர்.

அந்தக் குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் எச்.சி.வீரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவச் சட்டத்தின் 124 ஆவது பிரிவு மற்றும் 102 (1) ஆகிய பிரிவு சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக ஒரு நீதிமன்றில் அவர் விசாரிக்கப்படுவார். கடமையில் இருக்கும்போது அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இங்கு முக்கியமாக விசாரிக்கப்படும். மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் மற்றைய நீதிமன்றில் விசாரணை செய்யப்படும்.

எதிர்வரும் 16,17ஆம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளனபூ என்றார். _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக