11 மார்ச், 2010

நடிகை ரஞ்சிதா அமெரிக்கா ஓட்டம்




சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போல் வெளியான வீடியோ படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. நித்யானந்தா மீது மோசடி, கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ரஞ்சிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தப்படுகிறது.

சாமியாரின் சீடர் லெனின் என்ற தர்மானந்தா மற்றும் ரஞ்சிதாவின் கூட்டு சதி இதில் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். இதற்காக பெருந்தொகை கை மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கர்நாடக போலீசார் தேடிவருகிறார்கள். தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள ரஞ்சிதா வீடு பூட்டி கிடக்கிறது. ஐதராபாத்தில் உறவினர் வீட்டில் இருப்பதாக கூறப்பட்டது.

அங்கு அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு விட்டதாகவும் ஆந்திர பத்திரிகைகளும் தெலுங்கு இணைய தளங்களும் செய்தி வெளியிட்டன. ஆனாலும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் ரஞ்சிதா வீட்டை மர்ம ஆசாமிகள் நோட்டம் விடுவதாக அக்கம்பக்கதினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சாமியார் பிரச்சினையில் ரஞ்சிதா வாக்குமூலம் முக்கியமானதாக கருதப்படுகிறது. சாமியாருக்கு எதிராக அவரை சாட்சியம் அளிக்க வைக்க சிலர் நிர்ப்பந்திப்பதாக சாமியார் மட வட்டாரம் தெரிவிக்கிறது. ரஞ்சிதாவுக்கு கொலை மிரட்டல்களும் வருகிறதாம்.

இதையடுத்து ரஞ்சிதா திடீரென அமெரிக்கா புறப்பட்டு சென்றார். போலீஸ் விசாரணை மற்றும் எதிர் கோஷ்டியினர் மிரட்டல்களில் இருந்து தப்புவதற்காகவே அமெரிக்கா ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடக போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். விசாரணைக்காக அவரை கர்நாடகா கொண்டு வர போலீஸ் தரப்பில் ஏற்பாடுகள் நடக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக