8 செப்டம்பர், 2010

திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார்






சென்னை, செப்.8: பிரபல திரைப்பட நடிகர் முரளி, இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

நடிகர் முரளிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இன்று காலையில், சிகிச்சை பலன் இன்றி அவருடைய உயிர் பிரிந்தது.

தமிழ்த் திரையுலகில் 1984இல் பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். புதுவசந்தம், இதயம் ஆகிய படங்கள் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் அவர் தன்னுடைய 100 ஆவது படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவசந்தம், , இதயம், தங்க மனசுக்காரன், சின்னப் பசங்க நாங்க, பூமணி, காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், காதலே நிம்மதி, கனவே கலையாதே, இரணியன், அள்ளித் தந்த வானம், சுந்தரா டிராவல்ஸ், நம்ம வீட்டு கல்யாணம், காதலுடன், பாசக்கிளிகள் உள்ளிட்ட படங்கள் அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

சிவாஜி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுடன் முரளி இணைந்து நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக