8 செப்டம்பர், 2010

ஜனாதிபதியின் நடவடிக்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது: சோமவன்ச

ஜனாதிபதியின் நடவடிக்கை நல்லிணக்கத்தையோ தேசிய ஒற்றுமையையோ இந்த நாட்டில் ஏற்படுத்துவதாக தெரிய வில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பல் சமய ஒன்றிய பிரதிநிதிகளை இன்று சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சோமவன்ச அமரசிங்க 18ஆவது அரசியல் யாப்பு மாற்றம் அதற்கு முன்னரான சகல திருத்தங்களையும் நீக்கிவிட்டு ஒரு தனி மனிதனுக்கு சகல அதிகாரங்களையும் குவிக்கும் ஒரு நடவடிக்கையாகும்.

இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இது பேராபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.

மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி முறையை மாற்றி அதிகார பகிர்வு இல்லாமல் அதிகாரப் பரவலாக்கள் என்பதையே வலியுறுத்தி நிற்கின்றது.

இதனாலேயே 18ஆவது அரசியல் யாப்பு மாற்றத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

இலங்கையிலுள்ள சகல மக்களையும் சந்தித்து அவர்களை ஜக்கியப்படுத்தி இந்த அரசியல் யாப்பு பற்றி மக்கள் விடுதலை முன்னணி தெளிவுப் படுத்தி வருகின்றது. அதில் ஒரு கட்டமாகவே உங்களையும் சந்திக்கின்றேன் என்றார்.

இதன் போது தமிழ் மக்களுக்கெதிராக மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களில் எதிராக நடந்து கொண்டதையும் தற்போது வடக்கு கிழக்கில் திட்ட மிட்ட சிங்கள குடியேற்றம் தொடர்பாகவும் மட்டக்களப்பு பல் சமய ஒன்றிய பிரதி நிதிகள் சோமவன்ச அமரசிங்கவிடம் சுட்டிக்காட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக