அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மேல் மாகாண சபை ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கான பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டது.
மேல் மாகாண சபையின் மாதாந்த கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இடம் பெற்றது. இம் மாதாந்த கூட்டத்தில் இது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. மேல் மாகாண சபையின் கூட்டம் தலைவர் சுனில் விஜேரத்ன தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கம்பஹா மாவட்ட உறுப்பினர் முக்கியத்துவமிக்க பிரேரணையாக அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார். எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே. வி. பியும் மேற்படி பிரேரணை தொடர்பான விடயம் நீதிமன்றில் இருப்பதால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதனை எதிர்த்தனர்.
இவற்றை செவிமடுத்த மாகாண சபையின் தலைவர் சபையின் நட வடிக்கைகளை இடைநிறுத்தி விவாதத் துக்கு அனுமதி வழங்கினார். இதனை யடுத்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர்.
ஆளும் தரப்பினர் மாத்திரம் விவாதத்தில் கலந்து கொண்டனர். கொழும்பு மாவட்ட ஜனநாயக ஐக்கிய முன்னணி உறுப்பினர் எம். பாயிஸ் விவாதத்தின் போது சபையில் அமர்ந்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக