8 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தம்: 16 ஐதேக உறுப்பினர் ஆதரவு என்கிறார் பிரதமர்

உத்தேச 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர் என பிரதமர் டி.எம் ஜயரத்ன நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலகுவாக வெற்றி கொள்வோம் என அரசு சூளுரைத்துள்ளது.

அதேவேளை, அதற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்றும் இன்றும் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆளும் கட்சிக்கு 144 பேருடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8 உறுப்பினர்கள், ஐதேகவின் 6 உறுப்பினர்கள் மற்றும் அரசுடன் இணைந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் பிரபா கணெசன், தொழிலாளர் தேசிய முன்னணி உறுப்பினர் திகாம்பரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பியசேன ஆகியோர் ஆதரவாக வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமாக 159 விருப்பு வாக்குகள் பெறப்பட்டுள்ள நிலையில், சர்வஜன வாக்கெடுப்புகள் நடத்தத் தேவையில்லை என உயர் நீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளதாக சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக