இலங்கை மற்றும் மாலத்தீவுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
இதற்காக இரு நாடுகளுக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான தங்களது வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் தலைமையில் ஒரு குழுவை அமெரிக்கா அனுப்பி வைக்கவுள்ளது. ராபர்ட் பிளேக் தலைமையிலான அமெரிக்க வெளியுறவுக் குழு, இலங்கைக்கு புதன்கிழமை (ஜூலை 21) வருகை தரவுள்ளது.
இக்குழு, அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்தி இருதரப்பு உறவை வலுப்படுத்த வழிவகையை ஏற்படுத்தும். இதைத்தொடர்ந்து, மாலத்தீவுக்கு ஜூலை 22-ம் தேதி செல்லும் அமெரிக்க வெளியுறவுக் குழுவினர், அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இரு தரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்.
அமெரிக்க வெளியுறவுக் குழுவின் வருகை இலங்கை, மாலத்தீவு ஆகிய இரு நாடுகள் தரப்பில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை, மாலத்தீவின் அமெரிக்கத் தூதராக ராபர்ட் பிளேக் முன்பு பதவி வகித்தார். அமெரிக்காவின் வெளியுறவுத் துணை அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் இந்த இருநாடுகளுக்கும் இப்போதுதான் முதல் தடவையாக வருகை தரவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக