21 ஜூலை, 2010

முதற்தடவையாக ஐ.நா.வின் நிபுணர்குழு நியூயோர்க்கில் கூடியது

ஐக்கிய நாundefinedடுகள் நிபுணர் குழு நேற்று முன்தினம் நியூயோர்க்கில் முதல் தடவையாக கூடியது.

கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பாக இலங்கை நியமித்த விசாரணைக்குழுவுக்கு யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை சர்வதேச தரத்திற்கமைய விசாரணை செய்யும் செயலாற்றல் இருக்கிறதா என்பத பற்றியேனும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஐக்கியநாடுகள் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட 4 மாதகாலம் இந்தத் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது என்று இன்னர் சிற்றி பிறெஸ் தெரிவித்துள்ளது.

குழுவின் உறுப்பினர்களான மர்சூகி தருஸ்மன், யஸ்மின் சூகா, ஸ்வேன் றட்னர் ஆகியோர் ஐக்கியநாடுகள் வடபுல கட்டிடத்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 1.30க்கு அமர்வை ஆரம்பபித்தார்கள். இந்த தருணத்தில் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட 4 மாதகால அவகாசம் ஆரம்பிக்கிறது என்று பிறெஸ் தெரிவித்தள்ளது.

எந்த ஹோட்டலில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள், இரவு போசனத்தை எங்கே வைத்துக் கொள்ளலாம் போன்ற சம்பிரதாயபூர்வமான பேச்சுக்களுடன் ஆரம்பித்த இந்த அமர்வின் போது, இலங்கைக்கு விஜயம் செய்வதா என்ற முடிவு குழுவினரை பொறுத்தது என்று ஐக்கியநாடுகள் பேச்சாளர் மார்ட்டின் நெஸிர்கி தெரித்துள்ளதால் அதற்கான அனுமதியை தாங்கள் ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்திடமிருந்து பெறவேண்டியதில்லை என்று றட்னர் தெரிவத்தார்.

ராஜபக்ஷ அரசாங்கம் குழுவினருக்கு விசா வழங்க மறுத்தமையும் அவரது அந்த முடிவு துர்ப்பாக்கியமானது என்று தருஸ்மன் தெரிவித்திருந்தமையும் இங்கு நினைவுகூரத்தக்கது. இன்னர் சிற்றி பிறெஸ் ஏற்கெனவே அறிவித்தும் தற்போது அதனை உறதிப்படுத்தியதும் போல, தருஸ்மன் முன்னர் இலங்கை விசாரணைக் குழுவில் இடம்பெற்று, அக்குழு கலைக்கப்பட்ட போது தமது கொடுப்பனவு தொடர்பாக பிரச்சினை எழுப்பினார் என்று இலங்கை அரசாங்க வட்டாரங்கள் பழைய கதையை மீட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் பிறெஸ் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதி லின் பஸ்கோவை சந்தித்தகுழுவினர் தொடர்ந்து நிக்கலஸ் பிங்க் ஹேசமையும் சந்திக்க இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக