21 ஜூலை, 2010

கடலில் “ஆசிட்” கலப்பதால் மீன்களுக்கு ஆபத்து: கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் தகவல்



ரசாயன கழிவுகள், சாக்கடை, குப்பைகள் போன்றவை கடலில் கலக்கின்றன. இதனால் அதில் வாழும் மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. ரசாயன பொருட்களில் உள்ள “ஆசிட்” கலப்பதால் மீன்களுக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த தகவலை கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர். கடல்நீரில் ஆசிட் கலப்பதால் அதில் அசுத்தமான கார்பன்டை ஆக்சைடு அதிக அளவில் கலக்கிறது.

இதனால் அதில் வாழும் மீன்கள் நுகரும் தன்மையை இழந்து வருகின்றன. மீன்கள் குஞ்சுகளாக இருக்கும் போதே உடலில் அத்தன்மை உருவாகி வருகிறது. எனவே, அவை நுகரும் சக்தியை இழக்கின்றன.

இதன் மூலம் அவை தங்கள் உணவை தேடி பிடிக்கும் சக்தியை இழக்கின்றன. அதே வேளையில் எதிரிகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ளும் மோப்ப சக்தியையும் இழக்க நேரிடுகிறது. எனவே, அவை செத்து மடியும் நிலை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

தற்போது, கடலில் அதிக அளவில் “ஆசிட்” கலந்து வருவதால் உயிர்வாழ மீன்கள் போராடி வருகின்றன. ஆகவே, கடலில் “ஆசிட்” கழிவுகள் கலப்பதை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக