21 ஜூலை, 2010

5 தூதுவர்கள், 2 உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நியமன கடிதம் கையளிப்பு


இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து தூதுவர்களும், இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தங்களது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்தனர்.

ஈராக், அல் ஜீரியா, பூட்டான், மஸடோனியா, ஆர்மேனியா ஆகிய ஐந்து நாடுகளும் இலங்கைக்கென புதிய தூதுவர்களையும், சுவாசிலாந்தும் புரூணையும் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர்களையும் நியமித்து அனுப்பி வைத்துள்ளது.

ஈராக் தூதுவராக கஹ்தான் தாஹா கஸாப் காலி, சுவாசிலாந்து உயர்ஸ்தானிகராக புமெலோ ஜோசப் லோபே, பூட்டான் தூதுவராக தாசோ பிப்கேஸாங்க், புரூணை உயர்ஸ்தானிகராக சிடக் அலி, ஆர்மேனிய தூதுவராக அராக்கோப்யான், மஸடோனியா தூதுவராக பீட்டர் கவனோஸ்கி, அல்-ஜீரிய தூவராக முஹம்மத் ஹஸனே ஆகிய ஏழுபேருமே தங்களது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக