21 ஜூலை, 2010

சர்வகட்சி குழுவின் அறிக்கையென்று ஐ.தே.க எம்.பிக்கள் வெளியிட்ட அறிக்க முழுமைப்படுத்தப்பட்ட இறுதி ஆவணம் அல்ல



சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையென்று ஐக்கிய தேசிய கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை, முழுமைப்படுத்தப் பட்ட இறுதி ஆவணம் அல்லவென்று குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ‘தினகரனுக்கு’த் தெரிவித்தார்.

அதேநேரம், முழுமைப்படுத்த ப்படாத அறிக்கை வெளியானதால், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் எதிர்காலப் பணிகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாதென்றும் அமைச்சர் கூறினார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்ற கட்சிப் பிரதி நிதிகளுக்கிடையே இணக்கம் காணப்பட்ட விடயங்கள் அறி க்கையாகத் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு, அவரது ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு முழுமையான இறுதி ஆவண த்தைத் தயாரிப்பதெனவும் அதன் பின்னர் கட்சிப் பிரதிநிதிகள் கையொப்பமிட்டு வெளியிடுவதற்கே உடன்பாடு காணப்பட் டிருந்ததாகவும் தெரிவித்த அமைச்சர், அந்த உடன்பாட்டுக்குப் புறம்பாக முழுமைபெறாத ஆவணத்தை வெளியிட்டிருக்கிறார்களென்றும் அமைச்சர் கூறினார்.

எனினும், ஜனாதிபதியிடம் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அவர் குறிப் பிட்டார். ‘முன்பு புலிகளின் அழுத்தம் இருந்ததால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. ஜனாதிபதியின் ஆலோசனையின்படி கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேசியபோது அவர் கூட்டத்திற்கு வர சம்மதிக்கவில்லை.

அவர் இணங்கியிருந்தால், அப்போது ஜனாதிபதி பேச்சுக்கு அழைப்பு விடுத்திருப்பார்’ என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, தற்போது அரசியல் செல்வழியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அரசியல் தீர்வு தொடர் பில் புதிய ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு முன்செல்ல முடியும் என்று கூறி னார். வட அயர்லாந்து அரசியல் முறை மையை போன்று இலங்கைக்குப் பொரு த்தமான தீர்வு வரை வொன்றைத் தயாரி த்து வருவதாக அமைச்சர் விதாரண முன்பு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக