26 ஏப்ரல், 2010

புலிகள்' 7 பேர் கைது நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் கைது



நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட கவனமான மற்றும் விரிவான புலனாய்வுகளை அடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவைகள் அமைப்பினர் சந்தேகத்துக்குரிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.

இது தவிர 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளாயின.

மேலும் இந்த நடவடிக்கையின் போது 40,000 யூரோக்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.

நெதர்லாந்து நாட்டின் தேசிய குற்றப் புலானாய்வு போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் விடுதலைப் புலிகளுக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2002 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி, அப்படியான அமைப்புகளுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்குவது சட்டப்படி பொருளாதாரக் குற்றமாக கருதப்படும்.

மேலும் இந்த விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் ஆராயப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக