ரயில்வே தொழில் நுட்ப உத்தியோகஸ்தர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ள தையடுத்து ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பி வருவதாக ரயில்வே வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க நேற்று கூறினார்.
சம்பள உயர்வு வழங்குமாறு கோரி ரயில்வே தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் கடந்த வாரம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 4 ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதோடு ரயில் சேவையில் தாமதமும் ஏற்பட்டது.
ஆனால் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் (24) வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளதாக விஜய சமரசிங்க கூறினார். இவர்களின் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார். இதேவேளை நேற்றும் (25) சில ரயில் சேவைகள் தாமதமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது. இன்று முதல் வழமை போல ரயில் சேவைகள் இடம்பெறும் என வர்த்தக அத்தியட்சகர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக