26 ஏப்ரல், 2010

இரண்டாம் உலகப் போர்: முதலில் ஜப்பானால் தாக்குதலுக்கு உள்ளானது இந்தியப் படை - புதிய தகவல்

இரண்டாம் உலகக் போரில் ஜப்பான் முதலில் தாக்கியது இந்தியப்படைகளைத்தான் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
÷இதுவரை இப்போரில் அமெரிக்க கடற்படை மையங்களில் ஒன்றான ஹவாயில் உள்ள "பியர்ல் ஹார்பர்'தான் ஜப்பானால் முதலில் தாக்கப்பட்டது என்று நம்பப்பட்டு வந்தது.
இந்தத் தாக்குதலால் கடும் கோபமடைந்த அமெரிக்கா உடனடியாகப் போரில் குதித்தது குறிப்பிடத்தக்கது.
÷இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் வருமாறு:
÷இரண்டாம் உலகக் போர் நடைபெற்ற காலகட்டத்தில் இந்தியப் படைப்பிரிவு ஒன்று மலேசியாவின் கோடா பாரு நகர கடற்கரைப் பகுதியில் முகாமிட்டிருந்தது. 1941 டிசம்பர் 8-ம் தேதி உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் ஜப்பான் கடற்படையினர் இந்த முகாம் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
÷இதன் பின்னர் அதே நாளில் உள்ளர் நேரப்படி பின்னிரவு 2.38 மணியளவில் தான் ஹவாயில் உள்ள பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால் அமெரிக்கப் படையினர் அவர்கள் நாட்டு நேரப்படி டிசம்பர் 7-ம் தேதி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவித்து விட்டனர். ஆனால் உண்மையில் டிசம்பர் 8-ல் தான் பியர்ல் ஹார்பரை ஐப்பான் தாக்கியது.
எனவே மலேசியாவில் இந்தியப் படையினர் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலே இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் முதல் தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக