14 மார்ச், 2010

வெளிநாட்டு கண்காணிப்பாளரை வரவழைக்க எந்த கட்சியும் கோரவில்லை தேர்தல்கள் மேலதிக ஆணையாளர்

பொதுத்தேர்தலைக் கண்காணிக்கவென வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்கும்படி எந்தவொரு அரசியல் கட்சியோ, சுயேச்சைக்குழுவோ கோரவில்லை என்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் டப்ளியூ. பி. சுமணசிறி நேற்றுத் தெரிவித்தார்.

இதன் காரணத்தினால் பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் நோக்கில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்கும் எண்ணம் தேர்தல்கள் செயலகத்திற்கு இற்றைவரையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைப்பதற்கு பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல்கள் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பி ட்டார்.

புஎமது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறினார்.

இத்தேர்தலைக் கண்காணிப்பதற்கான வெளிநாட்டுப் பிரதிநிதிகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்குள் வரவழைக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக