14 மார்ச், 2010

பிரபாகரனின் தாயாரை மலேஷியாவுக்கு கூட்டிச்சென்றது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறேன் -எம்.கே.சிவாஜிலிங்கம்






நாட்டின் எந்த சட்டதிட்டங்களையும் மீறாத வகையிலேயே நான் பிரபாகரனின் தாயாரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றேன். இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களமே அவருக்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டையும் எவ்வித பிரச்சினையுமின்றி வழங்கியது. ஆனால், இன்று பிரபாகனின் தயாரை ஏன் அழைத்துச் சென்றீர்களென்றும் எம்மிடம் ஏன் அனுமதி பெறப்படவில்லையென்றும் விசாரிக்கின்றனர். .

பிரபாகரனின் தாயாரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிட்டு நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்தும் இது தொடர்பில் விசாரிக்கப்பட்டேன். இதன் பின்னர் தற்போது தொலைபேசி ஊடாகவும் தொடர்ந்தும் என்னை விசாரித்து வருகின்றனர். இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்றார். பிரபாகரனின் தாயாரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் அவா மேலும் கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை தடுப்புக் காவலிலிருந்தபோது மரணமடைந்தார். அவரது பூதவுடலையும் அவரது மனைவியையும் எவ்வித நிபந்தனைகளுமின்றியே அரசாங்கம் என்னிடம் ஒப்படைத்தது. பிரபாகரனின் தந்தையின் மரணத்தின் பின்னர் அவரது தாயாரைத் தொடர்ந்து இலங்கையிலேயே பராமரிப்பதற்கு அவருக்கு நெருக்கமான உறவினர்கள் எவருமில்லை. அத்துடன் அவர் கடந்த பத்து வருட காலமாக பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்..

இதன் காரணமாக அவரை கனடாவிலுள்ள அவரது மகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்தேன். இதற்காக பிரபாகரனின் தயாருக்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டது.:.

இந்த மாதம் 2ஆம் திகதி பிரபாகரனின் தாயாரை வடக்கிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்தேன். அவரை அழைத்து வருவதில் கூட எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. 3 ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த அவரை 5 ஆம் திகதி இரவு சிங்கப்பூருக்கு அøழத்துச் சென்று அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் இலங்கை திரும்பினேன். :.

அதன் பின்னர் அவர் சிங்கப்பூரிலிருந்து மலேஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினி ராஜேந்திரன் மலேஷியாவுக்கு வந்து தனது தாயாரை பொறுப்பேற்றுள்ளார். பிரபாகரனின் தந்தையின் பூர்வீகம் மலேஷியா என்பதால் அவரது உறவினர்களும் அங்கு இருக்கலாம். பிரபாகரனின் ஏனைய சகோதர, சகோதரிகளும் தற்போது மலேஷியா வந்துள்ளனர். ஆனால், அவரைக் கனடாவுக்கு அழைத்துச் செல்வதில் தற்போது சற்றுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் கனடாவில் குடியேறுவதற்கான அனுமதியை அந்த நாட்டு அரசாங்கம் சில வேளைகளில் நிராகரிக்கவும் முடியும். இவ்வாறானதொரு நிலையேற்பட்டால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்தியா விலுள்ள அவரது இன்னொரு மகளான ஜெகதீஸ்வரி மதியாபரணத்துடன் வாழ வைக்க முடியும். அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்பு வதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டால் மீண்டும் இலங்கைக்கே அழைத்து வரவேண்டிய நிலை யேற்படலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக