14 மார்ச், 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழீழக் கோட்பாட்டை





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழீழக் கோட்பாட்டை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதனால் தமிழீழத்திற்கு ஆதரவாக பேசுவோரைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளிவிவகார செயலர் கிலாரி கிளிண்டன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக அவசியமற்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மனித உரிமைமீறல்கள் இலங்கையில் இடம்பெற்றதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிண்டனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சட்டுக்களுக்கு பதிலளிக்கும் முகமாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக