14 மார்ச், 2010

இரு கிராம சேவகர் பிரிவுகளில் அடுத்த வாரம் மீள்குடியேற்றம்





நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட வுள்ளன. வவுனியா வடக்கு இரண்டு கிராம சேவகர் பிரிவுகளில் அடுத்த வாரம் மீள்குடி யேற்றங்கள் நடைபெறவுள்ளன.

இன்று 14ஆம் திகதியும் எதிர்வரும் 31ஆம் திகதியும் படையினர் மிதிவெடிகள் அகற்றப்பட்ட தற்கான சான்றிதழ்களை வவுனியா அரச அதிபரி டம் வழங்கவுள்ளனர்.

இதன்படி வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒழுமடு கிராம சேவகர் பிரிவிலும், ஊஞ்சல் கட்டி கிராம சேவகர் பிரிவிலும் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 900 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்கள் வவுனியா செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களிலிருந்தே அழைத்து வரப்படவுள் ளனர்.

வவுனியா வடக்கு பகுதியிலுள்ள சுமார் 20 கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்கள் முழுமையாக மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கட்டமாக கட்டம் மிதிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்கான சான்றிதழ்கள் அரச அதிபரிடம் கையளிக்கப்படும்.

இதேவேளை, இன்னும் சுமார் 1000 பேர் கிளிநொச்சி மாவட்டத்துக்கு மீள்குடியேற்றத்துக்காக அனுப்பி வைக்கப்ப டவுள்ளனர் என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக