25 பிப்ரவரி, 2010


17 கட்சிகள், 28 சுயேச்சைக் குழுக்கள் நேற்று வேட்புமனுத் தாக்கல்




பாராளுமன்றத் தேர்தல்களுக்காக நேற்று 17 கட்சிகளும் 28 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

அதேநேரம், 56 சுயேச்சைகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று அறிவித்தது.

இதன்படி, இலங்கைத் தமிழ் அரசு கட்சி யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, திகாமடுல்ல மாவட்டங்களில் நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது.

சமூகத்துவ சமத்துவ கட்சி காலி, கொழும்பு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், ஒக்கம வெசியோ ஒக்கம ரஜயோ கட்சி காலி, குருணாகல் மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் இலங்கை தேசிய முன்னணி பொலன்னறுவை, புத்தளம், கேகாலை, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் ஜாதிக்க ஜனசத்த கட்சி பொலன்னறுவையிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி குருணாகலையிலும் தேசப் பிரேமி தேசிய முன்னணி புத்தளம், இரத்தினபுரி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் சிங்களயி மஹா சம்மத பூமி புத்ர கட்சி புத்தளம் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய தேசிய மாற்று முன்னணி இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் இலங்கை தொழிலாளர் கட்சி இரத்தினபுரி, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும் ஜனசத்த முன்னணி கண்டியிலும் ஐக்கிய இலங்கை மகா சபை மாத்தளை, களுத்துறை மாவட்டங்களிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி களுத்துறையிலும் ஐக்கிய சமத்துவ கட்சி களுத்துறையிலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னியிலும் மலையக மக்கள் முன்னணி பதுளையிலும் நேற்று தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

இதேவேளை நேற்று யாழ்ப்பாணம், கம்பஹா, காலி, அநுராதபுரம், கேகாலை, கண்டி, கொழும்பு, மட்டக்களப்பு, நுவரெலியா ஆகிய ஒன்பது மாவட்டங்களிலிருந்தும் ஒவ்வொரு சுயேச்சைக் குழு வீதம் ஒன்பது சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின. திருகோணமலை, புத்தளம், மாத்தளை, வன்னி ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா இரண்டு சுயேச்சைக் குழுக்கள் வீதம் 08 சுயேச்சைக் குழுக்களும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 03 சுயேச்சைக் குழுக்களும் பொலன்னறுவையிலிருந்து 04 சுயேச்சைகளும், இரத்தினபுரியிலிருந்து 04 சுயேச்சைக்களுமாக மொத்தம் 28 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இதுவரை 226 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்று மாத்திரம் 56 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் நாளை (26) நண்பகல் 12.00 மணிக்கு பூர்த்தியடைய உள்ளன. இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று (25) பல மாவட்டங்களுக்கு சுப நேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதோடு ஐ. தே. க.வும் ஜனநாயக தேசியமுன்னணி (ஜே.வி

.பி. தலைமையிலான) ஆகிய கட்சிகள் இன்றும் நாளையும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளன.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானது. ஐ.ம.சு. முன்னணி ஏற்கனவே கம்பஹா, ஹம்பாந்தோ ட்டை காலி ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதோடு நேற்று மாத் தளை மாவட்ட ஐ.ம.சு.மு. வேட்பாளர் பட் டியல் முதன்மை வேட்பாளர் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தலைமையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்டி யலில் மாத்தளை மாநகர மேயர் ஹில்மி கரீம், செந்தில் சிவஞானம் (இ.தொ.கா.), முன்னாள் அமைச்சர்களான ரோஹன திஸாநாயக்க, நந்தி மித்ர ஏக்கநாயக்க ஆகியோரும் அடங் குவர். சுயேச்சைக் குழுவொன்றும் நேற்று (24) மாத்தளை மாவட்டத்துக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தது.

இதேவேளை ஐ.ம.சு. முன்னணி இன்று மட்டக்களப்பு, வன்னி, அம்பாறை, மாத்தறை உட்பட பல மாவட்டங்களுக்கு வேட்பு மனுக்களை கையளிக்க உள்ளதோடு நாளை (26) பதுளை, கொழும்பு உட்பட எஞ்சிய மாவட்டங்களுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ஐ.ம.சு. முன்னணி தெரிவித் தது.

இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நேற்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் போட்டியி டுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்தது. திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட புளொட் கட்சியும் நேற்று வேட்பு மனுக்களை கையளித்தன. வன்னியில் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அந்தக் கட்சியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

சத்தியசீலனை முதன்மை வேட்பாளராகக் கொண்ட த.ம.வி. புலிகள் கட்சியின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் ஆசாத் மெளலானா கூறினார். தமது கட்சி ஏற்கனவே வன்னி, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு த.ம.வி. புலிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் மட்டு மாவட்டத்துக்கு நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். இதே வேளை முன்னாள் எம்.பி. இராஜகுகனேஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக்குழு நேற்று (24) வன்னி மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது.

இதே வேளை, புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நேற்று (24) ஜனசெத்த முன்னணியும் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக