25 பிப்ரவரி, 2010


காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாணசபை



காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் முத்துஹெட்டிகம தனது வழக்கறிஞர்கள் ஊடாக நேற்று முன்தினம் காலி நீதிமன்றில் சரணடைந்தபோது தம்மால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை இரத்துச் செய்த நீதவான், அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். முத்துஹெட்டிகம வழக்கறிஞர்கள் சகிதம் சரணடைந்ததையடுத்தே சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய நீதவானினால் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது நீதிக்குப் புறம்பான முறையில் தென் மாகாணசபை முதலமைச்சரின் பதவியை பறிக்க எத்தனித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினார் என இவர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குற்றத்தடுப்பு பொலீசாரால் தொடரப்பட்ட வழக்கில் சந்தேகநபரான இவர் நீதிமன்றில் ஆஜராகைமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக