ஐதேகவுடன் கிழக்கு அமைப்பாளர்கள் முரண்பாடு
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாணம், திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்கள் இன்று கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் ரவூப் ஹக்கீமின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதிக ஆசனங்களை ஒதுக்கி, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே இவர்கள் வெளியேறியுள்ளனர்.
திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மஹ்ருப், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தயா கமகே மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சசிதரன் ஆகியோரே செயற்குழுவில் இருந்து வெளியேறியவர்களாவர்.
இந்த நிலையில் அவர்கள் நாளையதினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக