25 பிப்ரவரி, 2010

மிலிபாண்டின் கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் கண்டனம்



இலங்கையின் தேசிய பிரச்சினை தீர்வு தெடர்பில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ள கருத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கடும் கண்டனம் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் நேற்று பிற்பகல் தமது அமைச்சில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமது அதிருப்தியை வெளியிட்டார்.இப்பிரச்சினை தொடர்பில் பிரித்தானிய பதில் தூதுவரைச் சந்தித்து தான் விளக்கம் அளித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, லண்டனில் நடைபெறும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இயங்கும் உலக தமிழர் மாநாட்டில், டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டமை குறித்தும் அமைச்சர் அதிருப்பதி தெரிவித்தார்.

உலகத் தமிழர் மாநாடு, தமிழீழ கோட்பாட்டை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக அது இலங்கையின் இறைமையையும் தேசிய ஒருமைமப்பாட்டையும் மீறும் நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக