28 நவம்பர், 2009

வெற்றி வாய்ப்பில் நான்கு வீதம் முன்னணியிலுள்ள பொன்சேகா-மங்கள சமரவீர எம்.பி. தகவல்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பிரசார வடிவமைப்பாளர்களை இலங்கைக்கு கொண்டு வந்து பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தினால் வெற்றியடை முடியாது. அரசாங்கம் தனது தோல்வியை தற்போதே ஏற்றுக் கொண்டுள்ளது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி வாய்ப்பில் 4 வீதம் முன்னணியில் உள்ளார்..

ஜனநாயக ரீதியாக பொது மக்களின் வாக்குகளினால் தெரிவுச் செய்யப்படுபவர் இராணுவ அதிகாரியாக இருந்தாலும் அவரை இராணுவ ஆட்சியாளராக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றப் போதே மங்கள சமரவீர எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்..

இவர் இங்கு தொடர்ந்தும் கூறியதாவது:.

உத்தியோகபூர்வமான அறிவிப்பை மிக விரைவில் ஜெனரல் சரத் பொன்சேகா அறிவித்ததும் ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு கிடைக்காது னெ அரசாங்கம் கூறி வந்தது. ஆனால், தற்போது அந்நிலை மாற்றமடைந்துள்ளது..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் , ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பல தமிழ் அரசியல் கட்சிகள் முன்வந்துள்ளன. நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவை இன்று இந்த அரசாங்கம் மனசாட்சி இல்லாமல் தேசத்துரோகி என வர்ணித்து வருகின்றது. ஆனால், தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி வாய்ப்பில் 4 வீதம் முன்னிலையிலேயே உள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்ய தற்போதைய அரசாங்கம் தனது முழு ஆளுமையையும் பயன்படுத்தும். அந்த சவால்களுக்கு முகம் கொடுத்து போராட எதிர்க்கட்சிகளின் கூட்டணி தயாராகவே உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக