28 நவம்பர், 2009

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் தாய்நாட்டின் கௌரவம் பேணுவோம்

சர்வதேச விமான நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த

எத்தகைய தேசிய, சர்வதேச அழுத்தங்கள் வந்தாலும் தாய்நாடு தொடர்பில் மேற்கொள்ளும் தீர்மானங்களை மாற்றத் தயாரில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேபோன்று நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் எதிர்கால நலனுக்காகவும் எத்தகைய தீர்மானங்களையும் மாற்றவும் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தெற்கில் வீரவிலவில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டாலும் அதனால் பாதிக்கப்படும் மக்களின் நலன் கருதி அத்தீர்மானத்தை மாற்ற நேர்ந்ததாகவும் அதற்குப் பதிலாக லுணுகம்வெஹெர மத்தல பிரதேசத்தில் அதற்கான நிர்மாணப் பணிகளை இன்று ஆரம்பிக்க முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தெற்கில் மத்தல பிரதேசத்தில் புதிய சர்வதேச விமான நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, இதற்கு முன்னர் நாம் இப்பகுதிக்கு வந்தபோது இங்கு டயர் யுகமே இருந்ததாகவும் அன்று டயர் எரித்தவர்களும் டயரில் போடப்பட்டவர்களும் இன்று ஒன்றிணைந்துள்ள யுகம் உருவாகியுள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 210 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அம்பாந்தோட்டை மாவட்ட மத்தலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், உள்நாட்டு வெளிநாட்டு ராஜதந்திரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; கடந்த காலங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் விட்ட தவறுக்கான பலனையே நாம் இன்று சுமக்க வேண்டியுள்ளது. தெற்கில் விமான நிலையம், துறைமுகம் போன்றவை எப்போதோ அமைக்கப்பட்டிருக்க வேண்டியவை. அன்றைய தலைவர்கள் அதுபற்றி சிந்திக்காமையும் அவர்கள் விட்ட மாபெரும் தவறு. இதன் மூலம் நாட்டுக்கான பெரும் வருமானமும் இழக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக