28 நவம்பர், 2009

ஜனவரி 31க்குள் மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்யும் செயற்திட்டம் தயார்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் நிறைவு - அமைச்சர் ரிசார்ட்

வவுனியா நிவாரண கிராமங்களிலும், ஏனைய இடங்களிலும் தங்கியுள்ள மக்கள் அனைவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் திட்டங்களை வகுத்து செயற்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் மீள்குடியேற்றம் முற்றாக நிறைவடைந்துள்ள தாகக் கூறிய அமைச்சர் பதியுதீன், எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதிக்கு முன்னர் 3600 பேரை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்று (27) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இன்று (27) (நேற்று) மாந்தை கிழக்குப் பகுதியில் 800 பேர் மீளக்குடியமர் த்தப்பட்டுள்ளனர். எதிர்வரும் 30ம் திகதி பூநகரியில் 1000 பேர் குடியமர்த்தப்படுவர். கிளிநொச்சி கரைச்சியில் டிசம்பர் இரண்டாந் திகதி ஆயிரம் பேரும், ஐந்தாம் திகதி வவுனியா கிழக்கில் 800 பேரும் மீளக்குடியம ர்த்தப்படுவார்களெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக