29 நவம்பர், 2009

அழுத்தங்கள் விடுக்கப்பட்ட போது மோதலை நிறுத்த முடியாத கட்டம்:சரத் பொன்சேகா


மோதல்களை நிறுத்துமாறு இந்தியா அழுத்தங்களை கொடுத்த வேளை, இராணுவத்தினர் விடுதலை புலிகளுடனான் மோதலில், மோதல்களை நிறுத்த முடியாத ஒரு கட்டத்தை அடைந்திருந்தனர் எனத் தெரிவித்தார் சரத் பொன்சேகா.

விடுதலை புலிகளுடனான மோதல்களை நிறுத்துமாறு இந்தியா உட்ப பல்வேறு தரப்பினரால் விடுக்கபட்ட அழுத்தங்களையும் தாண்டி மோதல்கள் தொடர்ந்தது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் பொது வேட்பாளராக 'அன்னம்' சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் கீழ் தனது ஜனாதிபதி ஆட்சி நிலவுமெனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக இன்று இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.

இதன் போது தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நிறைவேற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கொள்கைகளை இதன் போது சரத் பொன்சேகா வெளியிட்டார்.

அங்கு அவர் உரையாற்றுகையில் ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர் விடுதலை புலிகளுடனான் யுத்த வெற்றி அரசியல் தலைமைத்துவமும் காரணம் எனவும் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,"பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர். " எனத் தெரிவித்தார்.

மேலும்,நாட்டையும் மக்களையும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து மீட்கவே முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக