29 நவம்பர், 2009

குழந்தையொன்றை பிறிதொருவருக்கு வழங்கிய வைத்திய அதிகாரி உள்ளிட்ட மூவர் மன்னாரில் கைது-

மன்னார் பிரதேசத்தில் அண்மையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட பிறந்து 07 நாட்களான ஆண்குழந்தை பொலீசாரினால்; மீட்கப்பட்டுள்ளது. நிதிபெறும் நோக்குடன் இக்குழந்தையை சட்டவிரோதமாக பிறிதொருவரிடம் கையளிக்க முனைந்தபொழுதே பொலீசார் மூவரைக் கைதுசெய்துள்ளனர். சுகவீனமுற்ற குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் அதன் தந்தை மன்னாரிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இருநாட்களின் பின்னர் அக்குழந்தை தொடர்பாக அவரின் தாயார் வைத்தியசாலையுடன் தொடர்புகொண்டபோது குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பியநிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வைத்தியத் தரப்பினர்மீது சந்தேகம்கொண்ட தாய் கடந்த 27ம் திகதி மன்னார் பொலீசில் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து வைத்தியர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 04ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக