17 மார்ச், 2011

கறிவேப்பிலையின் மகத்துவம்




உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும் போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ஈரல் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் காணப்படுகிறது.

கறிவேப்பிலை இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும், அறிவைப் பெருக்கவும் உதவுகின்றது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது தொடர்பாக பெலியத்தையில் அரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலையில் பணியாற்றும் வஜிர பி. எஸ். செனவிரட்ன வைத்தியர் கருத்து தெரிவிக்கையில்:- கறிவேப்பிலையில் 18 வகையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. அத்துடன் சமையலுக்கு பயன்படுத்தும் போது மிகவும் வாசனையாகவும் காணப்படும்.

கறிவேப்பில்லை சமிபாட்டுப் பிரச்சினை, மலச்சிக்கல். வாயு தொல்லை போன்றவற்றுக்கும் சிறந்த மருந்ததாகக் காணப்படுகிறது.

கறிவேப்பிலை வாரத்திற்கு இரண்டு முறை சம்பல் செய்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளும் போது வாழ்நாளில் சுகதேகியாக வாழ முடியுமென வைத்தியர் செனவிரட்ன மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக