17 மார்ச், 2011

ஜனசெவன வீடமைப்பு திட்டம் நாட்டின் பாரிய அபிவிருத்தி முன்னெடுப்பு








‘ஜனசெவன’ தேசிய வீடமைப்புத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டமாக அமைந்திருப்பதாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார நேற்றுத் தெரிவித்தார்.

நிர்மாண, பொறியியல் சேவைகள் மற்றும் வீடமைப்பு, பொது வசதிகள் துறை அமைச்சின் ‘ஜனசெவன’ பத்திரிகையின் வெளியீட்டு வைபவம் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது. அமைச்சர் விமல் வீரவன்ச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்நிகழ்வில் உரையாற்றும்போதே லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த ‘ஜனசெவன பத்திரிகை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிங்கள மொழிப் பத்திரிகையான தினமினவுடன் இணைப்பாக 18ம் திகதி முதல் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரவிருக்கின்றது.

இந்நிகழ்வில் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார தொடர்ந்தும் உரையாற்றுகையில் ‘ஜனசெவன’ தேசிய வீடமைப்புத் திட்டம் ஒருபாரிய அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டத்தைச் சரியான முறையில் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு செயல்திற னும் தூர நோக்கும் மிக அவ சியம். இதற்கேற்ப இப்பாரிய அபிவிருத்தி திட்டத்தை அமைச்சர் விமல் வீரவன்ச சிறந்த முறையில் முன்னெடுக்கின்றார். இது மிகவும் சிறந்த பணியாகும். இந்த நல்ல பணிக்கு எமது பங்களிப்பை அளிப்பதை எமது பொறுப்பாகக் கருதுகின்றோம்.

‘ஜனசெவன’ பத்திரிகை தினமின பத்திரிகையுடன் இணைப்பாக மக்களைச் சென்றடையும்போது ஜனசெவன திட்டம் குறித்து தகவல்களும், விபரங்களும் மக்களைச் சென்றடையும்.

இந்த நாட்டில் சமூக, கலாசார, அரசியல், மேம்பாட்டுக்கு எமது நிறுவனம் பாரிய பங்களிப்பு செய்து வருகின்றது. அந்த வகையில் ‘ஜன செவன’ பத்திரிகை எமது பத்திரிகையுடன் இணைப்பாகச் செல்லுவதைப் பெருமையாகக் கருதுகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டைத் துரிதமாக கட்டியெழுப்புவதற்கு நடவடி க்கை எடுத்து வருகின்றார். அதனால் செயல் திறன் மிக்க வர்களை அவர் அமைச்சராக நியமித்துள்ளார். அவர்களில் அமைச்சர் விமல்வீரவன்ச சிறந்த ஆக்கபூர்வமான அமைச்சராவார். இவருக்கு ஜனாதிபதி அவர்கள் வழங்கியுள்ள பொறுப்புக்களை அவர் சிறந்த முறையில் மேற்கொள் ளுகின்றார்.

எமது நிறுவனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவிலாளருமான பந்துல பத்மகுமாரவின் தலைமையின் கீழ் எமது வெளியீடுகள் அனைத்தும் சிறந்த முறையில் தரமானவையாக வெளிவருகின் றன. அவர் சிரேஷ்ட ஊடகவியலாளராக இருப்பதால் இதற்கு சிறந்த வழிகாட்டலை அவர் வழங்கி வருகின்றார்.

வீடு மக்களுக்கு முக்கியமான தேவையாகும். அதனை நிறைவேற்றி வைப்பதில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஜனசெவன பத்திரிகை பெரிதும் உதவும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக