17 மார்ச், 2011

இந்திய விசா விண்ணப்ப படிவம் இணையத்தில்




இந்திய உயர் ஸ்தானிகராலயம், இம்மாதம் 25ம் திகதி முதல் இந்தியாவுக்குச் செல்வதற்கான விசா விண்ணப்ப ஒழுங்குகள் இணையத் (on line) தொடர்பு மூலம் நடைபெறுமென்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

இத்திகதியின் பின்னர் விண்ணப்பதாரர்கள் என்ற இணைய முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் புதிய முறையான விசா வழங்கும் சேவையை இந்திய விசா விண்ணப்ப நிலையம் www.indiavisaonline.gov.in/visa (VFS Global) கொழும்பு கண்டி மற்றும் யாழ்ப்பாணம்

மற்றும் இந்திய உதவித் தூதரகம் அம்பாந்தோட்டை ஆகியன மூலம் பெற்றுக் கொள்வதை இலகுவாக்கும் நோக்கத்தைக் கொண்டது.

இப்புதிய நடைமுறையானது விண்ணப்பதாரர்கள் தங்கள் வீடு, கந்தோர் மற்றும் கணனி நிலையங்கள் போன்ற இடங்களிலிருந்து நேரடியாகவே விண்ணப்பிக்க வழிவகுக்கும்.

இணையத்தளத்தில் பூரணப் படுத்தப்பட்ட விண்ணப்பங்களைப் படியிறக்கம் செய்து (2.5 கீ 2.5 அங்குலம் வெள்ளை நிறப் பின்னணியுடனான) இரண்டு புகைப்படங்களை இணைத்து விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுக் கடவுச்சீட்டு மற்றும் தேவையான ஆவணங்களுடன் இந்திய விசா விண்ணப்ப நிலையம் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் மற்றும் இந்திய உதவித் தூதரகம் அம்பாந்தோட்டையிலும் கையளிக்க வேண்டும். மேலதிக தகவல்களுக்கு சூசூசூ.கீஷடுஷச்ங்ச்ஙிஸச்.ச்ஙுகி என்ற இணையத் தளத்தைப் பார்வையிடவும்.

விசாக்களை விரைவாக வழங்குவதை உறுதிப்படுத்துவதில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் அர்ப்பணிப்புடனுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக