18 டிசம்பர், 2010

ஐநா நிபுணர் குழு விரைவில் இலங்கை வருகை
ஐநா நிபுணர்கள் குழு வெகு விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூற அவரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவே வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக்குழு எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன் குழுவினர் இங்கு வருவர் என்றும் இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினரைச் சந்திப்பர் என்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக