ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத்பொன்சேகா வெற்றி பெற்றால் அவரது தலைமையிலான அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைவிட விரைந்து செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புடெனிஸினால் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்கட்சி வெற்றி பெற்றால் பிரதான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் பற்றி பொது கண்காணிப்புக்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் பற்றீசியாவினால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிரதான பிரச்சினைகளில் முக்கியமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். இவரது அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் அது ராஜபக்ஷ அரசாங்கத்தை விட துரிதமாக இயங்கும்.
இருப்பினும் தேர்தலுக்கு அப்பால் பிரச்சினைக்குரிய விடயங்கள் இரு பகுதியினரையும் பொறுத்தளவில் ஒன்றாகத்தான் உள்ளது. எந்த அரசாங்கமாக இருப்பினும் முன்னேற்றம் தொடருமென எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தனது கேபிளினூடாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக