18 டிசம்பர், 2010

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்



ஜனாதிபதியின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து இன்று பொருட்கள் அனுப்பி வைப்புமீள்குடியேற்றப்பட்ட நிலையில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை 20ஆம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை நடைபெறும். இதற்கான சகல நடவடிக்கைகளையும் மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இந்த நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட அமைச்சு அதிகாரிகள் இப் பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து அம்மக்களுக்கு இந்த நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளனர்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை எடுத்துக் கூறினர்.

இது குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியதுடன் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோனை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். இதற்கமைய நிவாரணம் வழங்குவதற்கும் அதனை அம்மக்களிடம் நேரடியாக சென்று கையளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதுடன் நிவாரணம் வழங்கும் நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு பாராளு மன்ற உறுப்பினர்களான மாவை சேனாதி ராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று மீள்குடியேற்ற அமைச் சுக்கு சென்று அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடினர்.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரி விக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்பொழுதும் தயாராக இருக்கின்றது. இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதுடன் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்றார்.

மன்னார் மாவட்டத்திலும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் விரைவாக நிவாரணம் வழங்குமாறு தாம் கேட்டுக் கொண்டதாகவும் அந்த நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம் பிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் அர சாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கை களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பு கிடைக்குமென்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர் மீள்குடியேற் றப்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக் கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிவாரணம் வழங்குவதற்காக இன்று காலை மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்லப் படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி பிரதேச செயலக பிரிவிலும், பூநகரி செயகல பிரிவிலும், கண்டாவளை பிர தேச செயலக பிரிவிலும் மீள்குடியேற் றப்பட்ட மக்களுள் சுமார் 1100 குடும்பங்கள் கடந்த கால மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டன.

இவர்களுக்கான நிவாரணப் பொருட்களே இன்று கொழும்பிலிருந்து எடுத்துச் செல்லப்படவுள்ளன.

அத்துடன் நாளை ஞாயிற்றுக்கிழமை வீடமைப்பு அதிகார சபையின் அலுவல கமும் கிளிநொச்சியில் திறந்து வைக்கப் படவுள்ளது.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவங்ச இந்த அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார் என கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் எதிர்வரும் 24ஆம் திகதி பச்சிளம் பள்ளி, கரச்சி பகுதியில் மீள்குடி யேற்றப்பட்ட சுமார் 500 குடும் பங்களுக்கான வீடமைப்புக்கான இரண்டாம் கட்ட உதவித் தொகை வழங்கப்படவுள்ளன.

புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர கலந்துகொண்டு உதவித் தொகையை வழங்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக