18 டிசம்பர், 2010

வளர்ச்சியடையாத நாடு இலங்கை: உலக வங்கி கருத்து


கொழும்பு: வளர்ச்சியே அடையாத நாடு இலங்கை எனவும், ஆண்டு வருமானம் 2 ஆயிரம் டாலருக்கும் குறைவாக உள்ளதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கியின் பொதுமோலாளர் நகோசி ‌ஒகோன்ஜோ இவியாலா , இது குறித்து ஜிங்கூவா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் நடுத்தர ஊதியம் பெறுவோர் உள்ள நாடுகளில் இலங்கை மட்டும் பின்தங்கியுள்ளது. மேலும் இலங்கை தனது புற நகர் பகுதிகளில் மறுபுணரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான சர்வதேச நிதி அமைப்புகள் மற்றும் உலக வங்கியிடம் வர்த்தக கடனாக 265 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி உதவியை கோரியுள்ளது. இது குறித்து அதிபர் ராஜ பக்ஷேவிடம் பரிசீலிப்பதாக கூறியுள்ளேன். வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள நாடாக இலங்கை உள்ளது. இந்நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த ஆண்டு வருமான வீதம் 2000 டாலருக்கு குறைவாக உள்ளதால் சர்வேதச நிதி நிறுவனங்களிடமிருந்த குறைந்த வட்டிக்கு கடன் பெற தகுதியில்லாதவையாக உள்ளன என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக