சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என உலகம் முழுவதும் பலவித ஆரூடங்கள் மூலம் கணிக்கப்பட்டது. ஜெர்மனியில் உள்ள ஓபர் கோஷன்ஸ் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தில் உள்ள பால் ரோஸ் என்ற ஆக்டோபஸ் ஆரூடம் சொன்னது. அதன்படி தொடர்ந்து 7 போட்டிகளில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.
ஆனால், அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதும் ஸ்பெயின் வெற்றி பெறும் என கணித்தது. அதன்படி ஸ்பெயின் அணி வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
தங்களது சொந்த நாட்டு அணிக்கு எதிராக ஆரூடம் சொன்ன ஆக்டோபசை வறுத்து சாப்பிட விரும்புவதாக ஜெர்மனி மக்கள் ஆத்திரத்துடன் தெரிவித்தனர். ஆனால் தங்களுக்கு சாதகமாக ஆரூடம் தெரிவித்த பால்ரோஸ் ஆக்டோபசுக்கு பாதுகாப்பு அளிக்க ஒரு குழுவை ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் லூயிஸ் அனுப்பி வைத்தார்.
இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை ஸ்பெயின் வெற்றி கொள்ளும் என்று இந்த ஆக்டோ பஸ் கூறியது. அதன்படியே ஸ்பெயின் வென்று கோப்பையை கைப்பற்றியது. இதனால் ஸ்பெயின் மக்களிடம் பால்ரோஸ் ஆக்டோபஸ் மிகவும் பிரபலம் ஆகிவிட்டது.
எனவே அந்த ஆக்டோபசை ரூ.20 லட்சத்துக்கு வாங்க ஸ்பெயின் நாட்டு வியாபாரி விரும்பினார். ஆனால் அதை விற்க ஜெர்மனியின் ஒயர்ஹீசேன் கடல் வாழ் உயிரின அருங்காட்சியகம் மறுத்து விட்டது. இதை தொடர்ந்து பால்ரோஸ் ஆக்டோபசை தங்கள் கவுரவமிக்க நண்பன் என ஸ்பெயின் மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக