17 ஜூலை, 2010

எதிர்க்கட்சி தலைவர் ரணில் மஹிந்த சிந்தனையின் பங்காளி



சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை உலகம் நிராகரித்துள்ளதாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். 40 வருடங்களுக்கு முன்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நிலைப்பாட் டிற்கு வந்திருந்தார். ஐ.தே.க தலைவர் தற்பொழுதே இந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார். இதன் மூலம் அவர் மஹிந்த சிந்தனையின் பங்காளியாகியு ள்ளரென அமைச்சர் டளஸ் அலஹப் பெரும கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர், வரவு செலவுத் திட்டத்தினூ டாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை

முன்னெடுத்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதிய கொள்கைகளை உலகம் நிராகரித்திருப்பதாகவும் ரணில் கூறியுள்ளார். தாமதித்தாவது ரணிலும் இந்த நிலைப்பாட்டிற்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.

யாப்புத் திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டபோதும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்களில் மாற்றமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த கருத்து ஏற்கக் கூடியதே ஆனால் அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டில் விரிசல் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளதை நாம் நிராகரிக்கிறோம்.

அனுபவமுள்ள அரசியல்வாதி இவ்வாறு கருத்துக் கூறியிருப்பது குறித்து கவலை அடைகிறோம். இப்பொழுது தான் பேச் சுக்கள் ஆரம்பமாகி ஆரம்ப கட்ட பேச் சுக்கள் இடம்பெறுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளதை ஏற்க முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக